சென்னை:மாற்று திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சார்ந்த, இலவச இணையவழி திறன் பயிற்சி, இன்று துவங்குகிறது.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், மாற்று திறனாளிகள் நலத் துறையும் இணைந்து, மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு சார்ந்த, இலவச இணையவழி திறன் பயிற்சியை நடத்துகின்றன. இதில், 'ஆடியோ இன்ஜினியரிங்' என்ற தலைப்பில், 'ரிக்கார்ட்டிங், டப்பிங், மிக்ஸிங்' போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்த பயிற்சியின் வாயிலாக, சினிமா, தொலைக்காட்சி, செய்தித்தாள், போட்டோ ஸ்டூடியோக்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.
பயிற்சியில் சேர விரும்பும் மாற்று திறனாளிகளின் வயது, 18- - 40க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இன்று துவங்கி, டிச., 21 வரை, தினமும் காலை, 10:00 முதல் மதியம், 1:30 மணி வரை, வார நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தபடும். மேலும், தகவல்களுக்கு, 044 - -28191203, 28192506, 28192407 என்ற எண்களிலும், jain@nfdcindia.com என்ற, இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE