புதுடெல்லி: சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்தை இந்தியாவில் அமைக்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆயுர்வேதா தினத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொண்டாடி வருகிறது. நேற்று 5ம் வருட ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு 2 ஆயுர்வேதக் கல்லூரிகளின் தொடக்க விழா நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐ.டி.ஆர்.ஏ. என்கிற ஆயுர்வேதக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், குஜராத் மாநிலம், ஜாம்நகரில் என்ஐஏ என்கிற ஆயுர்வேத தேசிய கல்லூரி என இரண்டு கல்வி நிலையங்களையும் காணொலி காட்சி வாயிலாகப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கலந்து கொண்டார். அப்போது பேசிய டெட்ராஸ், ‘‘இந்த தருணத்தில் ஒரு செய்தியைப் பணிவுடன் கூறிக் கொள்கிறேன். சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் இந்தியாவில் அமைக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். பாரம்பரிய மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், ஆதாரங்களை வலுப்படுத்தவும், பயிற்சி அளிக்கவும் இந்த மையம் பயன்படும். உலக சுகாதார நிறுவனத்தின் 2014-23ம் ஆண்டுக்கான பாரம்பரிய மருத்துவத் திட்டத்துக்கு இது உதவி செய்யும். இதன்மூலம், சர்வதேச நாடுகள் தங்கள் பாரம்பரிய மருத்துவத்தை வலுப்படுத்தி, ஆரோக்கியமான உலகை உருவாக்க முடியும்,’’ என்றார்.
* பிரதமர் நன்றி
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் நம் நாட்டில் அமைவது, இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். இந்த முடிவை எடுத்ததற்காக உலக சுகாதார அமைப்புக்கு நன்றி. குறிப்பாக அதன் தலைவர் டெட்ராஸுக்கு நன்றி கூற விரும்புகிறேன்,’’ என்றார். மேலும், குஜராத் மாநிலம், ஜாம்நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையும் நாட்டுக்கு மோடி அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. தேசிய முக்கியத்துவம் கொண்ட கல்வி நிறுவனமாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE