மாணவர்களில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளுகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது . அந்த பதில் மனுவில், கொரோனா பாதிப்பின் காரணமாக மாணவர் சமுதாயமே எதிர்பாராத வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் மாணவர்கள் ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது எந்த வகையிலும் மாணவனின் எதிர்காலத்தை பாதிக்காது என்றும் மேலும் அரசின் இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவது ஆகாது என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் பல்கலைக்கழகளுக்கு அதிகாரம் உள்ளதால் தான் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE