'புதிய பென்ஷன் திட்டம் குறித்தவல்லுநர் குழு முடிவு என்ன ஆனது' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2016 பிப்ரவரி 19 ல் 110 விதியின் கீழ்,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்துஆராய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழுவைஅமைத்தார். அதன் பின், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஸ்ரீதர் தலைமையிலானகுழு, ஒரு அறிக்கையை தயார் செய்து 2018 நவம்பரில் தற்போதைய முதல்வர் பழனிசாமியிடம் வழங்கியது.
அதன் பின் 2 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. குழுவின் அறிக்கை குறித்த தகவல்கள்வெளியாகவில்லை. தற்போதுள்ள ஆட்சி முடிய இன்னும் 6 மாதங்களே உள்ளது. அதற்குள் ஏதாவது அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பழைய பென்ஷன் திட்டம் வேண்டி வழக்கு தொடுத்துள்ள ஆசிரியர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியது: புதியபென்ஷன் திட்டத்தை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதிகொடுக்கின்றனர். தற்போதையஅரசும் வாக்குறுதி அளித்து குழு அமைத்து, நான்கரை ஆண்டுகளாகிறது. அரசு பழைய திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE