Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 November 2020

திருவண்ணாமலை கோயில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பிறகே பக்தர்கள் கோயிலுக்கு வர அனுமதி

இலவசமாக ஆன்லைன் தரிசனத்திற்கு கீழே கிளிக் செய்யவும் 


பக்தர்கள் இன்று 17/11/2020   முதல்  டிசம்பர் 3ஆம் தேதி வரை கோயிலுக்குள் வர அனுமதிக்கப்படுவர்


 ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு செய்ய அனுமதி உண்டு கோவில் நிர்வாகம் 


 திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும்       என்ற இணையதளத்தில் கட்டணமில்லா  முன்பதிவு செய்து பிறகே கோயிலுக்குள் வர முடியும்


 கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும் 


மற்றும் கோயிலுக்குள் நுழையும் போது ஆதார் அட்டை நகல் அவசியம் கொண்டு வரவேண்டும் என்று திருக்கோயில் நிர்வாகம் கூறியுள்ளது


 திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்

உலகமெல்லாம் போற்றப்படுவது சைவ சமயம். சைவத்திருத்தல நகரம் திருவண்ணாமலை. எந்நாட்டவருக்கும் இறைவன் தென்னாடுடைய சிவன். அந்த சிவப்பெயர்களில் சிறந்து ஓங்குவது அண்ணாமலையண்ணல்.


திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள்.







Tiruvannamalai, India - Circa January, 2018. Architecture of Annamalaiyar Temple in Tiruvannamalai, India.





அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை



CLICK 

 Online Free Darshan Booking

(17-11-2020 To 28-11-2020)






 மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். 

கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.

இந்தப் பிரபஞ்சம் இயங்க ஐந்து பெரும் சக்திகள் தேவை.நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற இந்த பிரிவுகளை பஞ்சபூதம் என்று சொல்கிறார்கள்.


பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற இந்த ஐந்து பஞ்ச பூதங்களுக்கும் தலம் அமைத்து நம்முன்னோர் வழிபட்டு ஆனந்த பரவசம் எய்தினர். இவற்றில் 'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். 



அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது.



இந்த தகவலை  உங்களுடைய  whatsapp குழுவில் பகிரவும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES