* இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் தடுப்பு மருந்து கிடைக்கும் என மாடர்னா நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னாவின் கொரோனா மருந்து 95 சதவீதம் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் 11 நிறுவனங்களுள் ஒன்று. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு கொண்ட தடுப்பூசிகளில் ஒன்றாக திகழும் மாடர்னா நிறுவனத்தின் மருந்து 95 சதவீதம் திறன் கொண்டது என்பது பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் நடத்தபட்ட மருத்துவ பரிசோதனையில், முதல்கட்ட தரவுகளின் படி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் திறம்பட தடுப்பு மருந்து செயலாற்றும் என்பது தெரியவந்துள்ளதாகவும், அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE