Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 November 2020

டெல்லியில் 8 வது தமிழ் பள்ளியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்




டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் மயூர் விகார் பகுதியில் ஜெயலலிதா பெயரில் தமிழ் பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை சென்னையில் இருந்தவாறு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், பாண்டியராஜன், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதிய பள்ளிக் கட்டடம் 6 ஆயிரத்து 515 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் 24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் 500 அவசர கால ஊர்திகள் சேவை துவங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில் முதல் கட்டமாக கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி 90 அவசரகால ஊர்தியை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்நிலையில் இன்று 2ம் கட்டமாக 108 எண்ணிக்கையிலான அவசரகால ஊர்தி சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். வரும் நாட்களில் மீதமுள்ள அவசர கால ஊர்திகளின் சேவையும் துவக்கி வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES