7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனு; அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் நிராகரிப்பு
இந்த நிலையில், இன்று (நவ. 24) காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பான முறையீட்டு நேரத்தில் நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், கவுன்சிலிங்குக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் சார்பில் முறையிடப்பட்டது
அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இடையில் தலையிட்டு கவுன்சிலிங்கை நிறுத்த முடியாது என மறுப்பு தெரிவித்தனர்.
மனு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, விசாரணைக்கு தங்கள் முன் பட்டியலிடப்படும் போது, விசாரிப்பதாக மனுதாரரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்
.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE