பசுமை பட்டாசு என்பது எப்படி இருக்கும்?
பசுமை பாட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும். வெடிக்கும்போது சப்தம் எழுப்பும், ஆனால் வெளியிடும் மாசு குறைவாக இருக்கும்.
சாதாரணமான பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது பசுமை பட்டாசுகள், 40 முதல் 50% குறைவான நச்சு வாயுவை வெளியிடும்.
"பசுமை பட்டாசுகள், சாதாரண பட்டாசுகள் வெளியிடுவதை விட சுமார் 40-50% வரை குறைவாகவே மாசை வெளியிடும். ஆனால், முற்றிலும் பாதுகாப்பானது என்றோ, பாதிப்பே ஏற்படுத்தாதவை என்றோ கூறிவிடமுடியாது" என்று கூறுகிறார் 'நீரி'யின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சாதனா.
வழக்கமான பட்டாசுகளை வெடிக்கும்போது வெளியேறும் நைட்ரஜன் மறும் கந்தக வாயுக்களை எப்படி குறைப்பது என்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்ததாக அவர் கூறுகிறார்.
இந்த புதிய ரக பட்டாசுகளை வெடித்தாலும் நைட்ரஜன் மற்றும் கந்தக வாயுக்கள் வெளியேறும். பசுமை பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் வழக்கமான பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை. அதற்கான புதிய ரசாயன சேர்க்கை சூத்திரத்தை 'நீரி' உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE