Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

18 November 2020

பிளே ஸ்டோரில் இருந்து அங்கீகரிக்கப்படாத 5 கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள்

அங்கீகரிக்கப்படாத 5 கடன் வழங்கும் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்
 






பணமோசடிகள் செய்ய வாய்ப்புள்ளதாக கூறி அங்கீகரிக்கப்படாத 5 கடன் வழங்கும் செயலிகளை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.


கொரோனா காலத்தில் நாடு முழுவதும் ஏரளமான மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் பணத் தேவையை சமாளிக்க மிக எளிதாக கடன் வழங்கும் இணையவழி நிதி நிறுவனங்கள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. 


ஓகே கேஷ், 


கோ கேஷ், 


ஃபிளிப் கேஷ், 


ஈகாஷ் 

ஸ்னாப் இட்லோன்


செல்போனின் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்துகொண்டால்போதும் ஆவணங்களுக்கேற்றார் போல் மூவாயிரம், ஐந்தாயிரம் என உடனடி கடன்களை இந்த இணையவழி நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.


கொரோனா காலத்தில் மக்கள் இதுபோன்ற நிதி நிறுவனங்களை நாடுவதால் இந்தகடன் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத செயலிகளை 400,000 முதல் 10 லட்சம் மக்கள் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளனர்


இதனிடையே கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் விதிமுறைகளை அறியாமால் கடன் பெற்று கடனுக்கு அதிக வட்டி , அபாராத வட்டி, கூட்டுவட்டி உள்ளிட்ட இன்னல்களுக்கு மக்கள் ஆளாவதாகவும் கடனை திரும்ப செலுத்த வழியுறுத்தி இந்த நிறுவனங்கள் மிரட்டல்களில் ஈடுபடுவதாகவும் மத்திய அரசுக்கு பூகார்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் இணையவழி கடன் வழங்கும் 5 நிறுவனங்களில் செயலிகளை கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.


இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கள் கூகிள் பிளே டெவலப்பர் கொள்கைகள் பயனர்களைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பாக வைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் மக்களை ஏமாற்றும் மற்றும் சுரண்டலில் ஈடுபடும் தனிநபர் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பயனாளர்களை பாதுகாக்க உதவும் வகையில் எங்கள் நிதிச் சேவை கொள்கையை சமீபத்தில் விரிவுபடுத்தினோம். 


இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஓகே கேஷ், கோ கேஷ், ஃபிளிப் கேஷ், ஈகாஷ் மற்றும் ஸ்னாப்இட்லோன் உள்ளிட்ட இணையவழி நிதி நிறுவனங்களின் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES