தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். தடையை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் மணிக்கணக்கில் ஈடுபட்டு, அதில் வரும் இலக்குகள் மூலம் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமையும் உருவானது.
இதையடுத்து, இந்த விளையாட்டுகள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன. அதன்பின், சீனா வால் உருவாக்கப்பட்ட பப்ஜி உள் ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் தற்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர் பாக, பல பகுதிகளில் காவல்துறையினர் அவ்வப்போது ஆய்வு நடத்தி, பணத்தை பறிமுதல் செய்வதுடன், சூதாட்டத்தில் ஈடுபடுவோரையும் கைது செய்கின்றனர். குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் அதிகளவில் இதுபோன்ற வழக்குகள் பதிவாகின.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.பிரபலமானவர்கள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விளம்பரம் செய் கின்றனர். தமிழகத்தில் விரைவாக அந்த விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினர்.
தமிழகத்தில் ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளை யாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE