சென்னை:அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங்கின் இரண்டாம் நாள் முடிவில் 313 எம்.பி.பி.எஸ். --38 பி.டி.எஸ். இடங்கள் நிரம்பின. சுயநிதி பல் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் உள்ள 313 எம்.பி.பி.எஸ். -- 92 பி.டி.எஸ். இடங்கள் என 405 இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் 235 பேர் மருத்துவ இடங்களை பெற்றனர்.
இரண்டாம் நாளான நேற்று 374 மாணவர்கள் அழைக்கப்பட்டதில் 303 பேர் பங்கேற்றனர். அரசு மருத்துவ கல்லுாரிகளில் மூன்று; சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 82 எம்.பி.பி.எஸ். இடங்கள்.அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள 5 பி.டி.எஸ். இடங்கள்; சுயநிதி பல் மருத்துவ கல்லுாரிகளில் 33அரசு ஒதுக்கீடு பி.டி.எஸ். இடங்களை தேர்வு செய்தனர். இதன்படி நேற்று 123 மாணவர்கள் விருப்பமான கல்லுாரியை தேர்ந்தெடுத்தனர்.
மேலும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.நேற்றைய நிலவரப்படி அரசு மருத்துவ கல்லுாரிகளில் 7.5 உள் ஒதுக்கீட்டில் உள்ள 227 எம்.பி.பி.எஸ்.- - 12 பி.டி.எஸ். இடங்கள் நிரம்பின.அதேபோல சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் வந்த 86 எம்.பி.பி.எஸ். - 33 பி.டி.எஸ். இடங்கள் நிரம்பின. மொத்தம்313 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி விட்டன; 92 பி.டி.எஸ். இடங்களில் 38 பி.டி.எஸ். இடங்களே நிரம்பியுள்ளன.
சுயநிதி பல் மருத்துவ கல்லுாரிகளில் 48 பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டுக்கான சேர்க்கை இன்றும் நடைபெறுவதால் 47 பி.டி.எஸ். இடங்கள் நிரம்பக்கூடும் என மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE