உடுமலை:உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2021-22 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச. 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராணுவ அமைச்சகத்தின்கீழ் மாநில அரசின் வாயிலாக உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம்வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.வரும் 2021-22 கல்வியாண்டு முதல் ஆறாம் வகுப்பில் மாணவியரும்சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
சேர்க்கைக்கான கல்வி தகுதி வயது இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம். http://aissee.nta.nic.in என்ற இணைப்பில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க நவ. 19 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது டிச. 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.
விண்ணப்பித்தல்,கல்வி உதவித்தொகை, நுழைவுத் தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு பள்ளி இணையதளத்தை பார்வையிடலாம்.இவ்வாறு பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு தெரிவித்தார்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE