சென்னை:எட்டு மாதங்களுக்கு பின், முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
கொரோனா தொற்று பரவலால், மார்ச்சில் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டில், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் வழிகாட்டுதலின்படி, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், வரும், 2ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், முதுநிலை பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பு மாணவர்களும், 2ம் தேதி முதல் கல்லுாரிகளுக்கு வந்து, நேரடி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.வெளி மாவட்ட மாணவர்கள், அவரவர் கல்லுாரிகள் உள்ள பகுதியில் ஏற்கனவே தங்கிய விடுதிகளில், தங்கி கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எட்டு மாத இடைவெளிக்கு பின், மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE