கோப்பு படம்
சென்னை:'நிவர்' புயல் கரையைக் கடந்து, ஆந்திராவை நெருங்கி விட்ட நிலையில், வங்கக் கடலில் மற்றொரு புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை, தமிழக நிலப்பகுதி வழியே, கரையைக் கடந்தது. இந்த புயல் தான், கடந்த பாதையெங்கும் கன மழையைக் கொட்டியது.புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களைக் கடந்து, ஆந்திராவுக்கு நகர்ந்தது.
அங்கு, இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துஉள்ளது.இந்நிலையில், வங்கக் கடலில் மற்றொரு புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 'வங்கக் கடலின் தென் பகுதியில், நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். 'அது, மேலும் வலுப்பெற்று, தென் மாவட்டங்களை நோக்கி நகரும்' என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், மீனவர்கள் இன்று முதல், வங்கக் கடலின் தெற்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்றைய வானிலையை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE