சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் தொடங்க இருப்பதை அடுத்து, அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்ய இதுவரை 29 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ளது. நவம்பர் 3ம் தேதி முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு 24,900 பேர் விண்ணப்பித்து 23,218 பேர் கட்டணங்கள் செலுத்தியுள்ளனர். அவர்களில் 19,007 பேர் விண்ணப்பங்களை சரிபார்த்து சமர்ப்பித்துள்ளனர்.
அதேபோல, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேற்று வரை 14,234 பேர் விண்ணப்பித்துள்ளனர். 12,577 பேர் கட்டணம் செலுத்தியுள்ளதுடன் 9,903 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 28 அரசு மருத்துவக் கல்லூரிகள், 13 சுயநிதி தனியார் எம்பிபிஎஸ் கல்லூரிகள், 18 சுயநிதி தனியார் பிடிஎஸ் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்–்களில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள விவரங்களை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து வரும் 16ம் தேதி எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மேற்கண்ட மாணவ- மாணவியரின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கு பிறகு கவுன்சலிங் தேதி அறிவிக்கப்படும் என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE