Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 November 2020

28 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2020

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2020
National Children’s Science Congress 2020
28TH NATIONAL CHILDREN’S SCIENCE CONGRESS 2020



உலகின் மிகப் பெ ரும் அறிவியல் திருவிழா, இந்தியாவின் மாணவர்களுக்கான மிகச்சிறந்த அறிவியல் நிகழ்வுகளில் ஒன்று தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு.

மத்திய அரசில் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DEPARTMENT OF SCIENCE AND TECHNOLOGY) மற்றும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு (NATIONAL COUNCIL FOR SCIENCE AND TECHNOLOGY COMMUNICATION) ஆகியவை இணைந்து நடத்துகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாட்டில் இப்பணிகளை ஒருங்கிணைக்கிறது.

குழந்தைகள் 2பேர் கொண்ட குழுவாக இணைந்து ஆய்வு செய்வதும் மாவட்ட, மாநில, தேசிய மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பதும் இந்நிகழ்வின் நடைமுறை. இதுவரை தமிழகத்திலிருந்து 1000க்கும் மேற்பட்ட ஆய்வுகள் தேசிய அளவில் இளம் விஞ்ஞானி விருதினைப் பெற்றுள்ளது.

சிறப்பான ஆய்வுகள் இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டிலும் உலகளாவிய மாநாடுகளிலும் பங்கு பெறும் வாய்ப்பைப் பெறும்.

இந்த வருடம் இந்நிகழ்வுகள் தொடங்க உள்ளது. நீங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் கீழேயுள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள். உங்களுக்கான தொடர் தகவல்கள் மற்றும் பயிற்சி குறித்த விபரங்கள் தொடர்ந்து உங்கள் மெயிலுக்கு அனுப்பப்படும்.

10 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கு பெறலாம். நீங்கள் பதிவு செய்ய நவம்பர் 12 வரை வாய்ப்புள்ளது. கடைசி நாள் 12.11.2020 இரவு 8.00மணி

பதிவு செய்வதற்கான லிங்க் https://forms.gle/Sg6YVe8t8bgxqVsN8
-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES