தமிழகத்தில் இன்று 1,534 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,74,710. சென்னையில் மட்டும் மொத்தம் 2,13,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,520.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,17,41,603.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 68,082.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,74,710.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,534.
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 467.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,68,025 பேர். பெண்கள் 3,06,651 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 914 பேர். பெண்கள் 619 பேர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,873 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,51,535 பேர்
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும், 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 11,655 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,833 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 14 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர் 2 பேர்.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE