100 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ வீரர் எழுதிய கடிதம் ஒன்று பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் வசிக்கும் ஒரு தம்பதி எப்போதும் போல் சாலையோரமாக நடந்து சென்றுள்ளனர். அப்போது சிறிய கேப்சூல் ஒன்று அவர்களது கண்ணில் சிக்கியுள்ளது. அதனை எடுத்து பார்த்தவர்களுக்கு பெரும் வியப்பு காத்திருந்தது. ஏனென்றால் அதனுள் கடிதம் ஒன்றும் இருந்தது. அது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்று கூறுகின்றனர். முதல் உலகப் போர் நடந்த சமயத்தில் ராணுவ வீரர் ஒருவர் தனது அதிகாரிக்கு அதனை எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புறாக்களை பயன்படுத்தி தகவல்களை அனுப்புவதற்கு இந்த கேப்சூலை பயன்படுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஜூலை 16 என தேதி குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த வருடம் என குறிப்பிடவில்லை. ஆனால் இது 1916 அல்லது 1910ம் ஆண்டில் எழுதப்பட்டவையாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதலாம் உலகப் போர் 1914 முதல் 1918 வரையிலான காலகட்டத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அந்த தம்பதி கடிதத்தை அருகில் உள்ள மியூசியத்தில் கொடுத்துள்ளனர். இந்த கடிதம் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருந்ததாக கூறுகின்றனர். தற்போது இதனை மியூசியத்தில் வைத்து பாதுகாக்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு பிறகு கடிதம் கிடைத்துள்ள அரிதான சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE