பத்தாம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களை பிளஸ்-1 வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பிளஸ்-1 வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கு வரும்போது சில தலைமை ஆசிரியர்கள் சேர்க்கை கடந்த 30.9.2020 அன்றுடன் முடிவுற்றது என தெரிவித்துள்ளனர்.
இந்த கல்வி ஆண்டில் சிறப்பு நிகழ்வாக பத்தாம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்போது, பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE