Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

06 November 2020

09.11.2020 பள்ளிகள் திறப்பு கருத்து கேட்பு கூட்டம் - தலைமயாசிரியர்களுக்கு அறிவுரைகள் - இயக்குநர் செயல்முறைகள்!

09.11.2020 பள்ளிகள் திறப்பு கருத்து கேட்பு கூட்டம் - தலைமயாசிரியர்களுக்கு அறிவுரைகள் - இயக்குநர் செயல்முறைகள்!

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள்-பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

Click Here To Download 

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந.க.எண்.1774/ஆ1/2020, நாள் 05.11.2020

- - -

பொருள் ;

பள்ளிக்கல்வி - அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள்  - பள்ளிகள் திறப்பது குறித்தது - கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் - சார்ந்த அறிவுரைகள்.

பார்வை :

1.அரசாணை எண்.613 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நாள் 31.10.2020

 

2.பள்ளிக் கல்வித்துறையின் அரசு செய்தி குறிப்பு வெளியீடு எண்.630 நாள் 04.11.2020

 

3. சென்னை, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.34462/பிடி1/இ1/2020, நாள் 04.11.2020

- - -

            மாண்புமிகு தமிழக முதமைச்சர் அவர்களால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை மற்றும்  தொற்றுநோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு நவம்பர் 16ஆம் தேதி முதல் 09,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு இணங்க அதனை செயல்படுத்தும் விதமாக பார்வை (1)ல் கண்டுள்ள அரசாணையின்படி தமிழகத்தில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை திறந்திடலாம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

            இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஏற்கனவே பெற்றோர்கள் கல்வியாளர்களின் கருத்துக்கள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இருந்தபோதிலும், அரசின் வழிகாட்டுதலின்படி அந்தந்த அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றார்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட ஏதுவாக வருகின்ற நவம்பர் 9ஆம் (திங்கட்கிழமை) தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கோவிட் 19 முன்னெச்செரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பார்வை (2)ல் கண்ட பள்ளி கல்வித்துறையின் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி பின்வரும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

            அவ்வாறு கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் அதிகம் பங்கேற்க வாய்ப்பு  உள்ளது. அச்சமயத்தில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு தனித்தனியாக கோவிட் 19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதிக அளவில் பெற்றோர்கள் வரக்கூடிய பள்ளிகளில் பெற்றோர்ரகளை வெவ்வேறு நேரங்களில் குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு அழைத்து கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று கூட்டம் முடிக்கும் பொழுதும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வெவ்வேறு நேரங்களில் முடித்து அனுப்ப வேண்டும். அச்சமயம் தலைமை ஆசிரியரே அனைத்து வகுப்பு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த இயலாத பட்சத்தில் உதவி தலைமையாசிரியர்களை கொண்டு  கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

            அவ்வாறு நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்ட அரங்கை/ அறைகள் சுத்தமாகவும் இருக்க கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்தல் வேண்டும். பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் அமரும்படி இருக்கைகள் அமைத்தல் வேண்டும். மேலும் கூட்டத்திற்கு வரும் பெற்றோர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர அறிவுறுத்தும்படி அனைத்து தலைமையாசிரியர்ரகள் அவரிடம் தெரிவிக்க வேண்டும்.

            கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருகை தரும் பெற்றோர்கள் பள்ளி முகப்பில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு சோதனை செய்து பள்ளி வளாகத்தில் நுழைய அனுமதிக்க வேண்டும். மேலும் கூட்ட அரங்கின் நுழைவாயிலில் கிருமிநாசினியால் (Hand Sanitiser) கைகளை சுத்தம் செய்த பின்பு கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள ஒருவரை நியமித்து எவ்வித சுணக்கமுமின்றி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

            மேலும், அரசுப்பள்ளி/ அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர், பெற்றோர்-ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி/ சி.பி.எஸ்.சி., தனியார் பள்ளிகளை சார்ந்த முதல்வர்கள்/ நிர்வாகிகள், பெற்றோர்களின் கையொப்பம் பெற்று கருத்து கேட்பு கூட்டத்தில் ஏகமனதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களையும் மற்றும் கூட்டம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றை தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 09.11.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக மின் அஞ்சல் (velloreceo@gmail.com) மற்றும் அதன் நகலிலை 09.11.2020 அன்றே அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

            சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தொகுத்து அரசுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு அனுப்பவேண்டியுள்ளது. மேலும், இக்கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும் என்பதை நினைவில் கொண்டு எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் கூட்டத்தை நடத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

            அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் நடைபெறும் கருத்துக் கேட்பு  கூட்டங்களை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆகியோர் பார்வையிட்டு அறிக்கையினை  வேலூர், முதன்மைக்கல்வி அலுவலருக்கு 09.11.2020 மாலை 5.00 மணிக்குள் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

      இணைப்பு : அரசு செய்திக்குறிப்பு

                                                முதன்மைக்கல்வி அலுவலர்,

                                                        வேலூர்.

பெறுநர்

1)   தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளர்கள்,

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்(மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் உட்பட), வேலூர் மாவட்டம்

நகல்

1)   கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், காட்பாடி வேலூர்.

2)   முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்‘

    இராணிப்பேட்டை.

3)   மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்

4)   அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்

5)   அனைத்து வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), வேலூர் மாவட்டம்


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES