புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதில ளித்துள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது வரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள் , 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.
அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம் , திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை . தமிழகம் ஏப் . , 1 ல் செயல்படுத்தினாலும் , இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.
இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் , ஓய்வூதிய நிதி ஒழுங் காற்று மற்றும் மேம்பாட்டு ஆணை யத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான் , ' ' என ஆணையம் பதில் ளித்துள்ளது.
இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்து வதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை இதனை செயல்படுத்த வேண்டு மென , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE