சென்னை:பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட நிதி, விரைவில் கிடைக்கும் வகையில், வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன.
தமிழக சமூக நலத்துறை சார்பில், 1992ல் இருந்து, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பத்துக்கு உதவும் வகையில், ஒரு பெண் குழந்தை இருந்தால், 50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், தலா, 25 ஆயிரமும் செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் இணைய, குழந்தையின் மூன்று வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தொகை, தமிழக மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப் படும். இந்த தொகை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, அக்குழந்தையின், 18 வயதுக்குப் பின், வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை, காசோலையாக வழங்கப்பட்டு வந்தது. இதில், பல்வேறு சிக்கல்கள் நிலவியதால், 18 வயது பூர்த்தியடைந்தும், முதிர்வு தொகைக்கு காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. தற்போது, அனைத்து குழந்தைகளுக்கும் வங்கி கணக்கு துவக்கப்பட்டு, நேரடியாக முதிர்வு தொகை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE