கணக்கு தொடங்குவது எப்படி?
தலை சிறந்த சிறு சேமிப்புத் திட்டமான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்றால் என்பது குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பார்க்கலாம் வாருங்கள்...
பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டம்!
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக 'சுகன்யா சம்ரிதி' எனும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம். இதில், செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகளைச் சேர்க்க வயது சான்றுக்கு பிறப்பு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலையில், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை வயது சான்று ஆவணமாக வழங்கலாம். இந்தத் திட்டத்தை தொடங்க அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம். பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை அல்லது பிறப்பு சான்றிதழ் நகலை காண்பித்து கணக்கை எளிதாகத் தொடங்க முடியும். செல்வமகள் திட்டத்தின் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் புகைப்படத்தை சேர்த்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
வட்டி விகிதம் மற்றும் பயன்கள்!
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. சிறு சேமிப்புத் திட்டத்திலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறது. 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்ணுக்கு 24 வயது ஆகும் போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு கணக்கை மூடி விடலாம்.
டெபாசிட் விவரம்!
செல்வ மகள் சேமிப்புக் கணக்கை துவக்கும் போது முதல் கட்டமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. இதற்கு முன்னர் 1000 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. வருடந்தோறும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் தொகை செலுத்த முடியும். காசோலை, வரையோலை (டிமாண்ட் டிராஃப்ட்) மூலமாக பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆன்லைன் பரிவர்த்தனை வசதியும் உள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE