சென்னை: 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கபடவில்லை. ஆன்லைன் வழியாகவே பாடம் நடத்தப்படும் சூழலில், அரசு சார்பில் கல்வித் தொலைக்காட்சியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் படங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தும் பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் முக்கிய தலைப்புகளை மட்டும் ஆழமாக படிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE