
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் தலைமையில், இணையவழியில் நடந்தது. கூட்டத்தில், 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முடிவிற்கு, கவர்னர் தாமதிக்காமல் உடன் அனுமதிக்க வேண்டும்.'ஆசிரியர் பணிக்கான வயது நிர்ணயம் மற்றும் ஊக்க ஊதியம் நிறுத்தம் அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'இவற்றை வலியுறுத்தி, நவ., 4ல் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, முடிவு எடுக்கப்பட்டது


No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE