தமிழக அரசுப் பணிகளுக்கான அடிப்படை விதிகளில் கவர்னர் மாற்றங்களைக் கொண்டு வந்து ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அதன்படி, சிறப்பு கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளை வைத்துள்ள அரசு ஊழியருக்கு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒரு ஆண்டில் 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.
முன்னதாக அவர், தினமும் பெற்றோரின் அரவணைப்பு அவசியம் தேவைப்படக் கூடிய சிறப்புக் குழந்தை என்பதை நிரூபிக்கக் கூடிய சான்றிதழை, மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் இருந்து பெற்று அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE