பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்களின் இலவச, 'லேப்டாப்'பில், 'நீட்' தேர்வுக்கான பாடங்களை வழங்க, பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அவற்றில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இலவச லேப்டாபவழங்கும் திட்டமும் ஒன்று.இந்த திட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 1 படிக்கும்போதே, லேப்டாப் வழங்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்பட்ட லேப்டாப்பை, பிளஸ் 2 பொது தேர்வுக்கான பயிற்சிக்கு பயன்படுத்துமாறு, ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த ஆண்டு, இலவச லேப்டாப்பில், பிளஸ் 2 தொடர்பான வீடியோ பாடங்கள், பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு லேப்டாப்பிலேயே, நீட் தொடர்பான வீடியோ பாடங்களை பதிவேற்றம் செய்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெறும் வகையில், அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், ஆசிரியர்கள், தங்களுக்கு கிடைக்கும் நீட் தொடர்பான பாடக் குறிப்புகளை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் வழியே வழங்கி வருகிறோம்.மேலும், நீட் பயிற்சியில் நடத்தப்படும் பாடங்களை வீடியோ முறையில் தயாரித்து, இலவச லேப்டாப்பில், பதிவேற்றம் செய்து தருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE