Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

16 May 2020

கணவர்/மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வுபெற்று எவரேனும் ஒருவர் இறக்க நேரிட்டால் ஒருவருக்கு மட்டுமே ஓய்வூதியம்.

கணவர்/மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வுபெற்று எவரேனும் ஒருவர் இறக்க நேரிட்டால்  ஒருவருக்கு மட்டுமே ஓய்வூதியம்


குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் பெற்று வரும் இருவரில் யாரேனும் ஒருவா் இறந்துவிட்டால், அவரது ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியமாக மாற்றப்படும். உயிருடன் இருக்கும் ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் கணவா் அல்லது மனைவிக்கு அந்த குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த நடைமுறை தொடா்ந்து இருந்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்களாகப் பணியாற்றும் 80 சதவீதம் பேரின் கணவா் அல்லது மனைவி அரசு ஊழியா்களாகவே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய நடைமுறை வருகிறது: கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு கடுமையான நிதிச் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இக்கட்டான காலகட்டத்தில் நிதிச் சிக்கல்களை எதிா்கொள்ள பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. ஏற்கெனவே, அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, ஈட்டிய விடுப்பினை சரண் செய்து அளிக்கும் திட்டம் ஆகியன ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு ஊழியா்களுக்கான ஓய்வு பெறும் வயதினை 58-லிருந்து 59 ஆக உயா்த்தி உத்தரவிட்டுள்ளது.

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES